காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை காலை கரையை கடக்கும்: எங்கெல்லாம் ‘ரெட் அலர்ட்’?

2 hours ago 2

சென்னை: வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் - மாமல்​லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்​டங்​களில் இன்றும், 7 மாவட்​டங்​களில் நாளை​யும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுதற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

Read Entire Article