காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை மையம்

2 hours ago 2

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது. மணிக்கு 30 கி.மீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18கி.மீ வேகத்தில் நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு – தென் கிழக்கில் 940 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

நாகைக்கு 740 கி.மீ தெற்கு – தென் கிழக்கில் திரிகோணமலைக்கு 450 கி.மீ தெற்கு – தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 860 கி.மீ தெற்கு – தென்கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்லம மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் அழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article