
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன். இவர் கடந்த ஆண்டு வெளியான புல் புலையா 3, சந்து சாம்பியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தற்போது பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி' எனற காதல் படத்தில் நடிக்கிறார்.
சமீர் வித்வான்ஸ் இப்படத்தை இயக்குகிறார். இவரை தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக ஷார்வரி வாக் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது..