கார் மோதியதில் முதியவர் பலி

1 day ago 1

திருமங்கலம், ஜன. 30: திருமங்கலம் அடுத்துள்ள மேலக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் சிவசாமி(73). இந்த பகுதியில் உள்ள பட்டாசுக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் உணவு வாங்கி கொண்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்திலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

The post கார் மோதியதில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article