*அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடந்தது. ஆணையர் சித்ராசுகுமார் வரவேற்றார். கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார். மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஏற்புரை வழங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘
‘‘காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நகராட்சி தலைவராக, துணைத்தலைவராக இருந்தவர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயராக பொறுப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
கடந்த ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறாமல் கானல் நீராக போனது. அத்தகையை கோரிக்கையை சொன்னதை செய்யும், சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். முதல்வருக்கும், அமைச்சர் கேஎன்.நேருவுக்கும் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் தலைமையிலான நல்ல அரசு நடத்து வருவதில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். கல்வி நகராமான காரைக்குடி மாநகராட்சியாக உயர்த்தப்படுகிறது என முதல்வர் அறிவித்தார். கல்விக்காக மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்ந்தவுடன் பொறுப்புகள் கூடி உள்ளது.
மாநகராட்சி மேயருக்கு வழங்கப்பட்ட 7 கிலோ வெள்ளி செங்கோல் ஏடிஏஎன் நகைகடை நிறுவனம் செய்துள்ளது. 101 முக்கால் தங்க செயின் மேயர் முத்துத்துரை குடும்பத்தை சேர்ந்த சிந்துராஜ்குமார், ரிவன் ராஜ்குமார், அழகப்பா கல்விகுழுமம், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், ஐயப்பா, மெஜஸ்டிக் மஹாராஜா, பாராம்ஸ் டெக்ஸ்டைல்ஸ், எஸ்கேஎம், மகரிஷி பள்ளி சேதுராமன், யுக்தேஷ், ஆர்எம்ஆர், கார்மெட், கார்னிவல் பேக்கரி பாஷா, மகன்லால் மேத்த ஆகியோர் சேர்ந்து இந்த மாநகராட்சிக்கு கொடையாக வழங்கியுள்ளனர்.
சிறு நகராக இருந்த காரைக்குடி வளர்ச்சியடைந்து மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இதனை தரம் உயர்த்தி தந்த முதல்வர், அமைச்சர் கேஎன்.நேருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், எம்எல்ஏகள் தமிழரசி, கரு.மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் கேஆர்.ராமசாமி, சுப.துரைராஜ், சுந்தரம், தொழிலதிபர் படிக்காசு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, வானதி முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், நெடுஞ்செழியன், சின்னத்துரை, மாநகர துணை செயலாளர் கண்ணன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணைத்தலைவர் காரை சுரேஷ், டிடீசிபி அப்ரூவல் கமிட்டி மெம்பர் ஜான்கென்னடி, மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், சொக்கலிங்கம், வட்ட செயலாளர் பாண்டி, பேரூராட்சி தலைவர்கள் கார்திக்சோலை, ராதிகா, சாந்தி சிவசங்கர், முகமதுமீரா உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை மேயர் குணசேகரன் நன்றி கூறினார்.
The post காரைக்குடியை மாநகராட்சியாக உயர்த்தி மக்களின் நீண்டநாள் கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார் appeared first on Dinakaran.