காரைக்குடியில் முதல்வர் நிகழ்ச்சி அமைச்சர்கள் ஆய்வு

5 hours ago 2

 

காரைக்குடி, ஜன. 18: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 21, 22ஆகிய தேதிகளில் கலந்து கொள்ளவுள்ளார். 21ம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, பட்டமளிப்பு விழா அரங்கில் உரையாற்றுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர், கூட்டுவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் நிகழ்ச்சியை முன்னிட்டு அவர் கலந்து கொள்ள உள்ள இடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித், துணைவேந்தர் ஜி.ரவி, எம்எல்ஏகள் மாங்குடி, தமிழரசி, மாநகராட்சி மேயர் முத்துத்துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது துணைமேயர் குணசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், மாநில தலைமைபொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர்கேஎஸ்.ரவி, கொத்தமங்கலம்சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காரைக்குடியில் முதல்வர் நிகழ்ச்சி அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article