சென்னை: ரயில் பாதை பராமரிப்பு காரணமாக, குருவாயூர் மற்றும் ஆலப்புழா ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்.16127) இன்றும் (18-ம் தேதி) வரும் 25-ம் தேதியும் சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். சாலக்குடி மற்றும் குருவாயூர் இடையே இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.