காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்

2 months ago 10
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திருச்சியை சேர்ந்த சிவா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "காரைக்குடி செட்டிநாட்டு கால்நடை பண்ணையில் 2வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்களை சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்" எனக் கோரியிருந்தார். பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ள காரைக்குடி பகுதிக்கு வெளி மாநிலத்தினரும் வெளிநாட்டினரும் வந்து செல்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், காரைக்குடி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு குறித்த கேள்வி எழாது எனக்குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read Entire Article