காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: 13 பேர் சிறைபிடிப்பு - என்ன நடந்தது?

1 day ago 1

புதுடெல்லி / காரைக்​கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ் (30), காரத்திகேசன்(27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன்(22), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியைச் சேர்ந்த நவெந்து (34), வானகிரியைச் சேர்ந்த ராஜேந்திரன்(36), ராம்கி(30), நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார்(26), நந்தகுமார்(30), பாபு(31), குமரன்(28) ஆகிய 13 பேர் கடந்த 26-ம் தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

Read Entire Article