
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மதுபானக் கடை அருகே நேற்று மாலை முதல் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, காருக்குள் ஒரு நபர் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சிவகங்கை மாவட்டம் பகையணி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.
10 நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்த தமிழ்செல்வன், சைதாப்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்து காரிலேயே படுத்து உறங்கியபோது அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.