காரியாபட்டி, மார்ச் 10: காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.16.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேலதுலுக்கன்குளத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை மற்றும் அழகியநல்லூரில் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வானன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.16.47 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்: நிதியமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.