காய்ச்சல் காரணமாக அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி

3 months ago 12

சென்னை: காய்ச்சல் காரணமாக அமைச்சர் கே.என்.நேரு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமானவர் கே.என்.நேரு. இவர், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வந்தார். இதனால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கே.என்.நேரு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சளி மற்றும் இருமல் பிரச்னை இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை முடிந்து விரைவில் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

The post காய்ச்சல் காரணமாக அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article