இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியிருந்த நிலையில் விஷ வாயு தாக்கி நடிகர், மனைவி, நாய் மர்ம மரணம்? தற்கொலையா, கொலையா என்றும் விசாரணை

3 hours ago 2

மெக்சிகோ: இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஹாலிவுட் நடிகர், அவரது மனைவி, வளர்ப்பு நாய் ஆகியோர் மர்ம மரணமடைந்த நிலையில், விஷ வாயு லீக்கானதால் இறந்திருக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் (95), அவரது மனைவியும் பியானோ கலைஞருமான பெட்சி அரகாவா (64), நியூ மெக்சிகோவில் வசித்து வந்தனர். சாண்டா ஃபே பகுதியில் இருக்கும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் தம்பதியினர் இறந்து கிடந்தனர்.

மேலும் அவர்களது வளர்ப்பு நாயும், அதே வீட்டில் இறந்து கிடந்தது. மூன்று சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடயவியல் நிபுணர் மைக்கேல் பேடன் கூறுகையில், ‘தம்பதியினரின் மரணமானது கார்பன் மோனாக்சைடு விஷவாயுவால் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஜீன் ஹேக்மேனின் கார் இன்ஜின் ‘ஆன்’ ஆன நிலையில் இருந்த போதோ, அல்லது அதனை சரியாக அணைக்கப்படாமல் இருந்திருந்தால் கார்பன் மோனாக்சைடு விஷ வாயு வெளியேறி வீட்டிற்குள் பரவியிருக்கலாம்.

அல்லது வீட்டில் இருக்கும் ‘பாய்லர்’ செயலிழந்து இருந்தாலும் கூட கார்பன் மோனாக்சைடு விஷவாயு வெளியேறி சம்பவம் நடந்திருக்கலாம். ஹேக்மேன் உடல் சமையலறையிலும், அரகாவா, நாயின் சடலம் குளியலறையிலும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு மருந்து பாட்டில்களும் மீட்கப்பட்டுள்ளன. தம்பதிகளின் உடலில் எவ்வித காயமும் இல்லை. வீட்டிற்கு வெளியே இருக்கும் 2 நாய்களும் நன்றாக உள்ளன. ஜீன் ஹேக்மேனின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நலப் பிரச்னைகளை எதிர் கொண்டு வந்தார். எனவே கொலையா, தற்கொலையா, விபத்து மரணமா அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

The post இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியிருந்த நிலையில் விஷ வாயு தாக்கி நடிகர், மனைவி, நாய் மர்ம மரணம்? தற்கொலையா, கொலையா என்றும் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article