ஆறுமுகநேரி, நவ. 26: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் 2024-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. முன்னாள் மேலாளர் அபுல்ஹசன் கலாமின் தலைமை வகித்தார். நிர்வாக பேரவை செயற்குழு உறுப்பினர்கள் 61 பேர் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 2024-27ம் ஆண்டிற்கான ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக முஹ்யத்தீன் தம்பி, துணை தலைவர்கள் துணி முஹம்மது உமர், முஹம்மது ஷாபி வாவு முஹம்மது சம்சுதீன், முஹம்மது நூஹ் சதக் தம்பி, பொதுச்செயலாளர் நவாஸ் அஹ்மது, இணை செயலாளர்கள் செய்யிது அபூதாஹிர், சொளுக்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர், ஜாஹிர் ஹூசைன், பொருளாளர் முஹம்மது தாஜூத்தீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான துனி உமர் அன்சாரி, மஹ்மூத் சுல்தான், பொறியாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் செய்திருந்தனர்.
The post காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.