காமராஜர் பிறந்த நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நாடார் பேரவை

5 hours ago 4

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் காமராஜரின் கல்விப் பணிகள் மற்றும் சமூக பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டு போற்றப்படுகின்றன. மேலும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உபகரணங்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், நெல்லை - தூத்துக்குடி நாடார் பேரவை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

Read Entire Article