புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

6 hours ago 2

சென்னை,

சென்னை புழலில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன.

இந்த கல்வி நிறுவனங்களில் இன்று காலை மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை பொருளாளர் ராஜாமணி முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளர் எம்.சுந்தர், சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எம்.ரவீந்திர நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், புதுச்சேரி மாநில முன்னாள் அரசு செயலாளருமான எஸ்.டி.சுந்தரேசன் கலந்துகொண்டு, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

நிறைவாக, சென்னை வாழ் நாடார்கள் சங்கம் மற்றும் காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டி.தங்கமுத்து, சென்னையை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் நாடார்கள் சங்கம் மற்றும் காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

Read Entire Article