காமன்வெல்த் மாநாடு: சபாநாயகர் அப்பாவு 2-ந் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்

2 months ago 12

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் நவம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) அன்று இரவு 11.25 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து மலேசியா நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து சிட்னி நகரை 5-ந் தேதி சென்றடைகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் நியூசிலாந்து நாட்டிற்குச் சென்றுவிட்டு, நவம்பர் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்புகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article