காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை

2 months ago 14

நவிமும்பை,

மராட்டிய மாநிலம் தானே நகர் நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 13 வயது சிறுமி தங்கியிருக்கிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருப்பதை அங்கு வேலை பார்க்கும் பெண் பராமரிப்பாளர் ஒருவர் கவனித்தார்.

இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதில் கடந்த ஜூலை மாதம் குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் நபர் ஜன்னல் வழியாக உள்ளே சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெவ்வேறு சந்தர்பங்களில் 3 ஆண்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பெண் பராமரிப்பாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி அறிந்த மற்றொரு பெண் பராமரிப்பாளர் சம்பவத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் பராமரிப்பாளர் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   

Read Entire Article