சென்னை: மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் இருந்தார். தமிழக அரசின் சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், த.வேலு, ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ, ரங்கநாதன் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் இரா.வைத்தி
நாதன், செய்தித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
The post காந்தியடிகளின் 156வது பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.