4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,12,998 கோடி கடன் – சாதனை படைத்த தமிழ்நாடு அரசு !

15 hours ago 3

சென்னை : 2,37,88,375 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,12,998.03 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கியசெயல்பாட்டினையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும்செயல்படுத்தி வருகிறது. பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற உன்னத தொலைநோக்கு பார்வையுடன், முதன்முறையாக 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் என்ற மகத்தான இயக்கம் தொடங்க வித்திட்டார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலரான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வருகிறது. சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி,2022- 2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி,2023- 2024ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.2024-2025ஆம் நிதியாண்டில் 35,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2025-2026ஆம் ஆண்டிற்கான நிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 07.05.2025 வரை 7,917 சுய உதவிக் குழுக்களுக்கு 698.87 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு நான்காண்டுகளில் 18,29,875 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 375 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,12,998.03 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,12,998 கோடி கடன் – சாதனை படைத்த தமிழ்நாடு அரசு ! appeared first on Dinakaran.

Read Entire Article