காந்திகிராமம் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

2 months ago 12

கரூர், நவ. 21: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உள்ள பூங்கா வளாகத்தில் பழுதடைந்த உபகரணங்களை சீரமைக்க வேண்டும். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பகுதிகள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது. அதனுடன் சிறுவர், சிறுமிகள் விளையாடும் வகையில் விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டன. உரிய பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே, இதனை புதுப்பித்து தர வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உபகரணங்களை சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post காந்திகிராமம் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article