காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம்

6 months ago 44

சென்னை,

இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல, அவர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம். சுத்தம் இல்லாததால் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். என்றார்.

Read Entire Article