சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் எப்படி தமிழ் மொழிக்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக கடந்த 2014-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான வித்யாசாகர் என்பவர் தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை வரும் நவம்பருக்குள் சமர்ப்பிக்காவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என ஏற்கெனவே அவருக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.