தேனி, மார்ச் 15: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவிஞர் தனுஷ்கோடி போராட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, அன்பழகன், சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த நாகஜோதி அரசு கிருபாவதி தேன்மொழி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6750 ஐ வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்கம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த சின்னசாமி, உடையாளி, தங்கமீனா, சுமதி, ராதிகா, பாலகிருஷ்ணன், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தேனி கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.