விருதுநகர், மார்ச் 15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட பென்சன்தாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பென்சன் தொகை ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். பென்சன்தாரர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஈமச்சடங்கிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 20 ஆண்டு பணிக்கு முழுப் பென்சன் வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பென்சனர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.