காதல் வசனம் பேசி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை...52 வயது நபர் கைது

1 hour ago 2

சென்னை,

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் பிளஸ் டூ மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதான தனியார் நிறுவன ஊழியர் பின் தொடர்ந்து சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவியின் குடும்பத்தினரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரின் குடும்பத்தினரும் ஒரே காம்பவுண்டில் வாடகைக்கு வசித்துள்ளனர். அப்போது 52 வயது நபர் தனக்கு திருமணமான நிலையிலும் மாணவியை தொடர்ந்து சென்று காதல் வசனங்களை பேசியுள்ளார். அப்போது உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த போதிலும் விடாமல் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் அண்ணா நகர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவிக்கு தொல்லை கொடுத்த தாக கைது செய்யப்பட்டுள்ள சுந்தராஜ் ஏற்கனவே மாணவி 10-ம் வகுப்பு படிக்கும்போதும் இதேபோல் தொல்லை கொடுத்துள்ளது விசார ணையில் தெரிய வந்தது. அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து உள்ளது.

Read Entire Article