
சென்னை,
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ளது. 'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
அஜித் குமார் நடித்த விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷா அடுத்து அஜித் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைப், சிரஞ்சீவியின் விஷ்வம்பரா, சூர்யாவின் 45வது படம் என வரிசையாக திரிஷா நடிப்பில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் பட்டுப் புடவை கட்டி தலையில் மல்லிகைப்பூ சூடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திரிஷா. அந்த புகைப்படத்தை மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள். அதோடு காதல் எப்போதும் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார் திரிஷா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவரை 7 மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்
சமீபத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை இவர் பதிவிட அதை சிலர் சோஷியல் மீடியாவில் வேண்டும் என்றே இவரைக் குறித்து பல வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது.