"காதல் என்பது பொதுவுடைமை" படத்தின் "தீயாய்" வீடியோ பாடல் வெளியானது

3 hours ago 1

சென்னை,

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருபவர் லிஜோமோல் ஜோஸ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான : மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, ஹனி பீ 2.5 , சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது நடித்துள்ள படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

தன்பாலின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி தயாரித்துள்ளார். நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "தீயாய்" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Best of luck team Delighted to present the soulful First Single #Theeyai Video Song from #KEPU #KaadhalEnbathuPodhuUdamai . Best wishes to Team ❤️https://t.co/Kr7NSFWFdQ#KEPUFrom14thFeb @JPtheactor @Dhananjayang @Nobinkurian @Rohinimolleti @jose_lijomol @danivcharles

— G.V.Prakash Kumar (@gvprakash) February 7, 2025
Read Entire Article