'காதலே காதலே' படத்தின் வீடியோ பாடல் வெளியானது

3 hours ago 1

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் 'மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'காதலே காதலே' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் இக்காலத்து இளைஞர்களின் காதலையும் அவர்கள் ஒரு உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை குறித்த படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை பிரேம் நாத் எழுதி இயக்கியுள்ளார். கீதா கோவிந்தம் படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ வாரி பிலிம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல் உரிமையை சரிகமா நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தின் 'அட விளையாட்டா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் ஹரிஹரன் பாடியுள்ளார், விஜயன் புகழேந்தி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கிடையில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Love, melody, and magic await! The #AdaVilayatta video song from #KadhaleKadhale is here to steal your heart ❤️ ▶️ https://t.co/NZ2ZkVda6bSung by: @santoshariharanLyrics by: Viyan PugazhendhiStarring @MahatOfficial & @MeenakshiGovin2@srivaarifilm @offBharathiraja pic.twitter.com/Lnjs70LOQx

— Sri Vaari Film (@srivaarifilm) January 22, 2025
Read Entire Article