காதலன் வேறொருவரை திருமணம் செய்ததால் 14 வாகனங்களுக்கு தீ வைத்த இளம்பெண்

1 day ago 4

திருமலை: காதலன் வேறொருவரை திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், 14 வாகனங்களை தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களில் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக காதலன், இளம்பெண்ணிடம் பழகுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென 2 நாட்களுக்கு முன்பு காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.

இதையறிந்த இளம்பெண் கடும் அதிர்ச்சியடை ந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த இளம்பெண் நேற்றுமுன்தினம் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கை தீ வைத்து எரித்துள்ளார். இதில் கொழுந்துவிட்டு எரிந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 பைக்குகளும் தீயில் கருகியது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மர்ம ஆசாமிகள் செய்த சதி செயலாக இருக்கலாம் என பொதுமக்கள் கருதினர். பின்னர் குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பைக்குகளை இளம்பெண் தீவைத்து எரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் விசாகப்பட்டினம் டவுன் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காதலன் ஏமாற்றியதால் பைக்குகளை இளம்பெண் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காதலன் வேறொருவரை திருமணம் செய்ததால் 14 வாகனங்களுக்கு தீ வைத்த இளம்பெண் appeared first on Dinakaran.

Read Entire Article