சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை பெருநகர காவல் ஆணையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள். ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைப்பு
*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 13 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்படும்
*ஜன.16 காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது
The post காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபட உள்ளனர்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.