காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம் டிசம்பர் 19, 21 மற்றும் 26, 28 தேதிகளில்

2 months ago 9

வேலூர், டிச.12: காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை செகந்திராபாத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சிக்கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே ஏற்கனவே தென்மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. தற்போது கூடுதலாக இரண்டு சேவைகளை காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 07176 செகந்திராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரயில் வரும் 19ம் தேதி இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மவுலாஅலி, நலகொண்டா, மிர்யாலகுடா, நாடிகுடே, பிதுகுரல்லா, சட்டேனப்பல்லி, குண்டூர், தெனாலி, சீராளா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்தை சனி அதிகாலை 1.30 மணியளவில் அடைகிறது. மீண்டும் கொல்லத்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட அதே பாதையில் மறுநாள் காலை 11.15 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. இதே காலஅட்டவணைப்படி 26 மற்றும் 28 தேதிகளில் சேவையை இந்த ரயில் வழங்குகிறது.

The post காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம் டிசம்பர் 19, 21 மற்றும் 26, 28 தேதிகளில் appeared first on Dinakaran.

Read Entire Article