
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கோவையில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நாளை (23-ந்தேதி) காலை 6.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12680) காட்பாடி வரையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது,காட்பாடி - சென்டிரல் இடையே ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளை மற்றும் 25-ந் தேதி வழக்கம்போல் சென்டிரல் வரை இயக்கப்படும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (12679) சென்டிரலில் இருந்தே நாளை மற்றும் 25-ந் தேதி இயக்கப்படும். மேலும், அசோகாபுரத்தில் இருந்து நாளை மற்றும் 25-ந் தேதி காலை 4.45 மணிக்கு சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும் ரெயிலும் (16552), சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் 25-ந் தேதி பெங்களூருவுக்கு இயக்கப்படும் லால்பாக் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம்போல் சென்னை சென்டிரலில் இருந்தே புறப்படும், சென்டிரலுக்கே வந்தடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.