காட்டாங்குளம் ஊராட்சி விழுதவாடி ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு..!!

2 hours ago 4

காஞ்சிபுரம்: காட்டாங்குளம் ஊராட்சி விழுதவாடி ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போனதாக சாலவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின் பேரில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், விழுதவாடி ஏரியில் 3 சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடல்களை மீட்டனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சத்ரியன், விஷ்வா, பரத்ராஜ் என்பது தெரியவந்தது.

உடல்களை கைப்பற்றிய உத்திரமேரூர் போலீசார் விழுதவாடி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள மூவரும், குளிக்க வந்து நீச்சல் தெரியாமல் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளைஞர்களின் உறவினர்கள் வாலாஜாபாத் -செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளது.

 

The post காட்டாங்குளம் ஊராட்சி விழுதவாடி ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article