காட்சிப் பொருளான புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

8 hours ago 4

 

ஊத்துக்கோட்டை, ஜூலை 14: பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, ஊரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள பவானி அம்மன் கோயிலுக்கு வந்து செல்வார்கள். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், கடந்த 2018-2019ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6.50 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.

மேலும், அடுத்த வாரம் ஆடி மாதம் பிறக்க இருப்பதால், பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா தொடங்குகிறது.  அதற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் தாகத்தை போக்கும் விதமாக, பஸ் நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காட்சிப் பொருளான புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.

Read Entire Article