காஞ்சியில் 2 ஆண்டு ஆகியும் முழுமையான செயல்பாட்டுக்கு வராத குழந்தைகளுக்கான இடையீட்டு சேவை மையம்

1 week ago 2

பிறப்பு முதல் 18 வயது வரையில் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

காஞ்சிபுரம் மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குழந்தை வளர்ச்சி தாமதம், மன வளர்ச்சி குறைபாடு, பெருமூளை வாதம், செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிக்சை அளிக்க இந்த தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.1.14 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

Read Entire Article