காஞ்சிபுரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம்: சட்டசபையில் எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல்

4 months ago 11

காஞ்சிபுரம்: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்(திமுக) பேசுகையில், காஞ்சிபுரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம் கட்ட அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘‘காஞ்சிபுரம் தொகுதியில் வணிக வளாகம் கட்ட போதிய கேட்பு இருக்கும்பட்சத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.சி.வி.எம்.பி.எழிலரசன்: காஞ்சியில் வணிக வளாகம் வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட நெடிய காலமாக இருக்கிறது. அது வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக கட்டித்தர வேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு காரணம், தற்போது அது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை இருக்கிறது.

குறிப்பாக, போக்குவரத்து வசதி அதிகமுள்ள வந்தவாசி சாலையில் அமைந்திருக்கக்கூடிய வீட்டுவசதி வாரியத்தின் பகுதியிலேயே 1.33 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட வேண்டும். நிச்சயமாக அது வணிக பெருமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். வீட்டுவசதி வாரியத்திற்கும் உரிய வருவாயை ஈட்டித்தரும்.அமைச்சர் சு.முத்துசாமி: அந்த இடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்திலே வணிக வளாகம் கட்டினால், போதிய அளவுக்கு மக்களிடத்திலேயிருந்து அதற்கு தேவை இருக்குமா என்பதை ஒரு ஆய்வு செய்து, அப்படி இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக இந்த ஆண்டே அதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

The post காஞ்சிபுரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம்: சட்டசபையில் எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article