சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், ரூ.640 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியது. இத்தொழிற்சாலையில் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
The post காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் appeared first on Dinakaran.