காஞ்சிபுரத்தில் மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!!

5 hours ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவத்தில் மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 5ம் நாள் உற்சவத்தில் பல்லக்கில் வீதி உலா சென்றபோது வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பல்லக்கு வந்தபோது பாராயணம் பாடுவதில் வடகலை-தென்கலை இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து பல்லக்கை நடுரோட்டில் நிறுத்தி விட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து 15 நிமிடங்களுக்குப் பின் சாமி புறப்பாடு நடைபெற்றது.

The post காஞ்சிபுரத்தில் மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!! appeared first on Dinakaran.

Read Entire Article