காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி: ரூ.640 கோடியில் அமைகிறது

3 months ago 18

சென்னை: காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெறும் என தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இன்ப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தாகின.

இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்ய காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.640 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நிறுவ சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இத்தொழிற்சாலையில் மூலம் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி: ரூ.640 கோடியில் அமைகிறது appeared first on Dinakaran.

Read Entire Article