காஞ்சிபுரத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

2 months ago 10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 2,489 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் வகையில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ – மாணவிகள் என அனைத்து மாணவர்களுக்கும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் ஏற்பாட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், எழிலரசன் எம்எல்ஏ கலந்துகொண்டு, ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் 890 மாணவிகளை பாராட்டி, கல்வி உபகரணங்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆந்திரசன் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 2,489 மாணவ – மாணவிகளை ஊக்கப்படுத்தியும், வாழ்த்தியும் கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாணவர் அணி துணை செயலாளர் ராம்பிரசாத், தலைமை ஆசிரியர்கள் ஹேமலதா, குளோரி, சாந்தகுமாரி, மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article