காஞ்சி பேரறிஞர் அண்ணா நினைவில்லத்தில் அண்ணா திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை

3 months ago 30

காஞ்சிபுரம், செப்.29: காஞ்சிபுரம் திமுக பவளவிழா பொதுக்கூட்டத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்அண்ணா நினைவில்லத்தில், அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, மு.க.ஸ்டாலினுக்கு பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ராஜகுளம், பொன்னேரிக்கரை ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அண்ணா நினைவில்லம் சென்ற முதல்வருக்கு வழிநெடுகிலும் பெண்கள் மலர்தூவி வரவேற்றனர். அண்ணா நினைவில்லத்தில், அண்ணா சிலைக்கு மா்லை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, முதல்வர் பவளவிழா திடலுக்கு புறப்பட்டுச் சென்றார். அண்ணா நிளைவில்லத்தில் உள்ள குறிப்பேட்டில், ‘‘மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில் அயராது உழைப்போம். நன்றி வணக்கம்’’ என்று எழுதி மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

The post காஞ்சி பேரறிஞர் அண்ணா நினைவில்லத்தில் அண்ணா திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article