காஞ்சிபுரம்: தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்ததற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, காஞ்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பவள விழா மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்பி செல்வம், கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பவள விழா பொதுக் கூட்டத்தை கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விதத்தில் காஞ்சிபுரத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பவள விழா பொது கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட திமுக வணங்கி வாழ்த்துகிறது.
காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாய் நடந்த பவள விழா பொதுக்கூட்டத்தில், கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் தா.மோ அன்பரசனுகும். தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் அதைப்போலவே கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தமைக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், முன்னாள் எம்எல்ஏ அரசு, ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், செயற்குழு உறுப்பின சுகுமார், நாராயணன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், சிகாமணி, காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சிவக்குமார், சரவணன், சிற்றரசு, பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், மோகன் தாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post காஞ்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்; துணை முதல்வராக உதயநிதியை அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.