காஞ்சி, செங்கை மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

1 month ago 4

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினமான 1.11.2024 அன்று ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டங்கள் (23.11.2024) இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படவுள்ளன.

The post காஞ்சி, செங்கை மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article