காசா: காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் மேற்கொண்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். 3 பெண் பிணை கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிட்ட நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. பெயரை வெளியிடாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வராது என பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார். காசாவில் 2023ல் தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. 15 மாதங்களாக நடைபெற்று வந்த போரில் இதுவரை சுமார் 46,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
The post காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் மேற்கொண்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.