காசாவில் 2ம் கட்ட போர் நிறுத்தம் இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தை

3 hours ago 3

கான் யூனிஸ்: இஸ்ரேல் -ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மோதல் வெடித்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியின் பேரில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் கட்ட போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

2வது கட்ட பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது. கெய்ரோவில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், கத்தார், அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காசாவில் ஹமாசிடம் இருக்கும் மீதமுள்ள பிணை கைதிகளை உயிருடன் திரும்ப ஒப்படைப்பது, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகளை முழுமையாக விலக்கிக்கொள்வது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. உயிரிழந்த பிணைக்கைதிகளின் சடலங்கள் 3வது கட்டத்தில் ஒப்படைக்கப்படும். இஸ்ரேல் தகவலின்படி மீதமுள்ள 59 பிணை கைதிகளில் 24 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகின்றது.

The post காசாவில் 2ம் கட்ட போர் நிறுத்தம் இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article