காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை

1 month ago 10

ஊட்டி: குன்னூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் காங்கிரஸ் சார்பாக பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், ஒன்றிய வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் பகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் மற்றும் ஊட்டி எம்எல்ஏ கணேஷ் துவக்கி வைத்தார்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய இந்த பாதயாத்திரை பெட்போர்டு, அரசு மருத்துவமனை வழியாக குன்னூர் – உதகை சாலையில் உள்ள காமராஜர் சிலை வரை வந்தடைந்தது. அங்கு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பாதயாத்திரைக்கு, மாநில பொது செயலாளர் விவேக் லஜபதி தலைமை வகித்தார். நகர துணை தலைவர் கிங்ஸ்டன், மாநில மகளிரணி துணை தலைவர் சித்ரா, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் குன்னூர் ஒருங்கிணைப்பாளர் சிராஜ், காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கோமதி உட்பட 150க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Read Entire Article