சென்னை :தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு கனிமொழி எம்.பி. வரவேற்பு அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தியில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளிவராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது; பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் பொறுத்துக்கொள்ள தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் நிச்சயமாக நியாயம் கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.”இவ்வாறு தெரிவித்தார்.
The post பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் : திமுக எம்.பி. கனிமொழி appeared first on Dinakaran.