காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு

6 hours ago 2

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசும்போது " பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களையும் தன்வசப்படுத்தி கொண்டுள்ளது. எனவே, தற்போது நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்" எனப்பேசியிருந்தார்.

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் மோன்ஜித் சேத்தியா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக புகாரளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டம் 152 மற்றும் 197(1) பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article