புதுடெல்லி,
ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி நேற்று மாலை 6.35 மணிக்கு விஸ்தாரா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்.பி. டேனிஷ் அலி பயணம் செய்தார். இந்நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி சுமார் அரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்தபடி விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள டேனிஷ் அலி, விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது மிகவும் பதற்றமான அரை மணி நேரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றதாக விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.